செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (26.01.2026) நடைபெற்ற நாட்டின் 77வது குடியரசு நாள் விழாவில், இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினார். பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மத்தியக் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் இன்று (06.01.2026) டெல்லியில் நடைபெற்ற விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 13 புதிய நூல்களை (புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, நான்மணிக்கடிகை, நானாற்பது, முத்தொள்ளாயிரம் (மலையாள மொழிபெயர்ப்பு) சிலப்பதிலாரம் (தெலுங்கு மொழிபெயர்ப்பு) தமிழ்நாட்டில் இராமர் திருக்கோயில்கள் (தமிழ் & இந்தி மொழிபெயர்ப்பு), தமிழ்நாட்டு மரச் சிற்பங்கள், சங்க இலக்கிய அகராதி, அகநானூற்று அகரமுதலி- வினைச்சொற்கள், அகநானூற்று அகரமுதலி - பெயர்ச்சொற்கள்)
மற்றும் 'சைகை மொழியில் திருக்குறள் காணொலிகளையும் வெளியிட்டுச் சிறப்பித்தார். இவ்விழாவில் நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இன்று(13-01-2026) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று(13-01-2026) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 49ஆவது சென்னைப் புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்துகிறது. இப்புத்தகக் காட்சியில் எப்-51 அரங்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கு அமைந்துள்ளது. இந்த அரங்கிற்குச் செம்மொழி நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்தரசேகரன் அவர்கள் 12.01.2026 நாளன்று பார்வையிட்டார்கள் .
மகாராஷ்டிரா மாநிலத்தின், நாக்பூரில் உள்ள மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் (DIET) PM SHRI பள்ளியைச் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் கல்விசார் பயணமாகச் சென்னைக்கு வருகைபுரிந்திருந்தனர். அவர்கள் 08.01.2026 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வருகைபுரிந்து மின்நூலகம், செம்மொழிப் பல்லூடக மையம், இணையவழித் தமிழ்க் கல்வி மையம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். அது குறித்த பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. நிறுவனத்திற்கு வருகைபுரிந்த அவர்களை நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி ஆகியோர் வரவேற்றுச் சிறப்பித்தனர்.

வாரணாசியில் நடைபெற்று வரும் காசித் தமிழ்ச் சங்கமத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் ‘தமிழ் கற்கலாம்’ நிகழ்விற்குத் தமிழ்நாட்டிலிருந்து வருகைபுரிந்துள்ள ஆசிரியர் குழுவினர் இன்று (07.12.2025) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கிற்கு வருகைபுரிந்தனர்.
வாரணாசியில் 02.12.2025 முதல் 15.12.2025 வரை நடைபெறும் காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கில் 04.12.2025 அன்று வாரணாசி பிபி குஜராத் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ் கற்பிக்கப்பட்டு, அது குறித்த வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் செம்மொழி நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் பரிசளித்து வாழ்த்தினார்.
வாரணாசியில் 02.12.2025 முதல் 15.02.2025 வரை நடைபெற்று வரும் காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கில் 04.12.2025 அன்று டெஹ்ராடூன் பொதுப் பள்ளி, வாரணாசி மாணவர்களுக்கு அடிப்படை தமிழ் கற்பிக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
வாரணாசியில் நடைபெற்று வரும் காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை 02.12.2026 அன்று மாண்புமிகு உத்திரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்தியநாத் அவர்கள், மாண்புமிகு மத்தியக் கல்வி அமைச்சர்
திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள், மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள்,
மாண்புமிகு தகவல் & ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முனைவர் எல். முருகன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் நிறுவனப் பணிகளை எடுத்துரைத்தார்
வாரணாசியில் 02.12.2025 அன்று நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 தொடக்க விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பிய 10 மொழிபெயர்ப்பு (ஒடியா, அசாமிஸ், துளு, உருது, ஸ்பானிஷ், ஹங்கேரியன்,ஜெர்மன், பர்மிய, மலாய், அரபு) மற்றும் ‘தமிழ் கற்கலாம்’ 5 தொகுதிகள் உள்ளிட்ட நூல்களை மாண்புமிகு உத்திரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்தியநாத் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு மத்தியக் கல்வி அமைச்சர்
திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டார்கள். இந்நிகழ்வில் மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி,
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கைலாஷ்நாதன், மாண்புமிகு தகவல் & ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முனைவர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்
வாரணாசியில் 02.12.2025 முதல் 15.02.2025 வரை நடைபெறும் காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கில் 03.12.2025 அன்று, வாரணாசி ஸ்ரீ அக்ரசென் மகாஜனி மகாவித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ் கற்பிக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜெர்மனியில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்று வரும் ‘பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சி-2025’இல் இன்று (18.10.2025) இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (ICSSR) ஏற்பாடு செய்த “இந்தியாவில் சமூக மற்றும் மனித அறிவியல் மற்றும் தன்னிலையாற்றல் வளர்ச்சி” என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலுக்கு இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICSSR) உறுப்பினர் செயலாளரான பேராசிரியர் தனஞ்ஜய் சிங் அவர்கள் தலைமையேற்றார்.
இந்த நிகழ்வில், பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்) அவர்கள் கலந்துகொண்டு, திருக்குறள், சங்க இலக்கியங்களில் காணப்படும் தன்னிலையாற்றல் வளர்ச்சி குறித்த குறிப்புகளை எடுத்துரைத்தார். மேலும், திருவள்ளுவரின் சமூக மற்றும் மனித அறிவியல்களுக்கான தொலைநேக்குச் சிந்தனைகளையும் எடுத்துரைத்து, அவை இன்றைய தன்னிலையாற்றல் வளர்ச்சி குறித்த நவீன கருத்துகளுடனும் எவ்வாறு தொடர்புடையவை என்பதைக் குறிப்பிட்டு உரை வழங்கினார்.
ஜெர்மனியில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்று வரும் ‘பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சி-2025’இல் "இந்தியா-கிரேக்கம் வெளியீட்டுத் தொடர்புரையாடல்" என்ற நிகழ்வு, 16-10-2025 அன்று நடைபெற்றது. இது இந்தியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளின் பதிப்பகத் துறைகளுக்கிடையே ஒற்றுமைக்கான இக்கலந்துரையாடலில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த திரு. மிச்சாலிஸ் கலமாரஸ் மற்றும் திரு. அர்ஜிரிஸ் கஸ்தனியோட்டிஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வு பேராசிரியர் மிலிந்த் சுதாகர் மராத்தே (தலைவர், தேசிய புத்தக அறக்கட்டளை) அவர்கள் தலைமையில் திரு. குமார் விக்ரம் (தலைமை ஆசிரியர் & இயக்குநர், தேசிய புத்தக அறக்கட்டளை) அவர்கள் வழிகாட்டுதலில் நடைபெற்றது.
பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்) அவர்கள் கலந்துகொண்டு, பண்டைய கிரேக்கத் தமிழக வணிகம், உறவு நிலைகள் குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள பல செய்திகளைத் தொகுத்து உரை வழங்கினார். மேலும் திரு. கார்த்திக் ராஜ் குஷ்வா மற்றும் பிற பதிப்பாளர்களும் உரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜெர்மனியில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்றுவரும் ‘பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சி-2025’இல் இடம்பெற்றுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை முனைவர் பி. சந்திரமோகன் இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு அரசு அவர்களும் திரு. ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப., சிறப்புச் செயலாளர், நிதித் துறை, தமிழ்நாடு அரசு அவர்களும் மருத்துவர் எம். ஆர்த்தி இ.ஆ.ப., மாநில நெறிமுறை அதிகாரி, சமக்ரா சிக் ஷா, தமிழ்நாடு அவர்களும் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்கள்.
ஜெர்மனியில் ‘ பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சி-2025 ’ அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்று வருகிறது. இன்று (15.10.2025) நடைபெற்ற தொடக்க விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனக் கண்காட்சி அரங்கினை இந்தியாவிற்கான துணைத்தூதர் திருமிகு. சுசித்ரா கிஷோர் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். இவ்விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்கள்
அமெரிக்க மாணவர்கள் வருகை
அமெரிக்க நாட்டு ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லாண்டாவில் உள்ள மோர்அவுஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்திலிருந்து மருத்துவ மாணவர்களில் மூவர் சித்த மருத்துவத்தை ஒரு பாடமாகத் தெரிவுசெய்து படித்து வருகிறார்கள். சென்னை, தி.நகரிலுள்ள இந்திய நலவாழ்வு நல்லறத்தின் முனைவர் மரு. ப. செல்வசண்முகம் அவர்களுடன் அமெரிக்க மாணவர்களாகிய திரு. அலெக்ஸ், திருமிகு மிஷாரா, திருமிகு ஜடாமோரி ஆகிய மூவருடன், அமெரிக்கப் பேராசிரியர் ஸ்ரீதரன் ஆகியோர் 07-10-2025 அன்று செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு வருகைபுரிந்தனர். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்களைச் சந்தித்து நிறுவனத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி, ஆக்கப்பணிகளைக் கேட்டறிந்தனர். நிறுவன வளாகத்தையும் நூலகத்தையும் பார்வையிட்டனர். இயக்குநர் மருத்துவ மாணவர்களுக்கு நிறுவன வெளியீடுகளை பரிசளித்துச் சிறப்புசெய்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (15.08.2025) 79ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர்
பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்துத் தலைமையுரை ஆற்றினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
நிறுவனப் பணியாளர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

05.04.2025 அன்று, மாண்புமிகு
மத்திய நிதி அமைச்சர் திருமதி
நிர்மலா சீத்தாராமன் அவர்களைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர்
பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகள், நிறுவனம் மேற்கொண்டு வரும்
தமிழாராய்ச்சிப் பணிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர்
அவர்களுக்கு இயக்குநர்
எடுத்துரைத்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனப் புத்தக மையத்தை இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் 18.03.2025 அன்று திறந்துவைத்துச் சிறப்பித்தார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்கள் உடனிருந்தார்.
21.02.2025 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் காசித் தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்சியினிடையே உலகத் தாய்மொழி நாள் விழாவினைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் கொண்டாடியது.
செம்மொழி நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பன்மொழி அறிஞர்கள் கலந்துகொண்டு தாய்மொழியின் சிறப்புகள் குறித்து உரையாற்றினர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற (21.02.2025) உலகத் தாய்மொழி நாள் – 2025 விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன் அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். நிறுவனத்தின் துணைத் தலைவர் மருத்துவர் பேராசிரியர் சுதா சேஷய்யன் அவர்கள் வாழ்த்துரையும், பதிவாளர் ரெ. புவனேஸ்வரி அவர்கள் அறிமுகவுரையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
இந்திய மொழிகளின் வளங்கள் குறித்து முனைவர் எஸ். ஜெயபிரகாஷ் (தெலுங்கு), திருமதி ஆர். ப்ரீதா (மலையாளம்), முனைவர் மா. அரங்கசாமி (கன்னடம்), திருமதி மங்களா எஸ். பாதக் (மராத்தி), முனைவர் பெ. சரஸ்வதி (இந்தி), திருமதி சீமா டீ. மேத்தா (குஜராத்தி), திருமதி மௌசுவாமி கோஸ்வாமி (அசாமி), திருமதி கோயலி தாஸ் (வங்காளம்) ஆகியோர் உரையாற்றினர். நிறுவனத்தின் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் முனைவர் இரா. வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரையும், ஆராய்ச்சி அலுவர் முனைவர் ந. தேவி அவர்கள் நன்றியுரையும் வழங்கினர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (26.01.2025) நடைபெற்ற நாட்டின் 76ஆவது குடியரசு நாள் விழாவில் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினார். பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

28.11.2024 அன்று, மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. சுனில் குமார் பர்ன்வால் இ.ஆ.ப. அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு ஆய்வுப் பணிகளைக் கேட்டறிந்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் சுதா சேஷய்யன், இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்று வரும் 'இந்தியக் கலை மரபுகள்' பயிலரங்கின் ஒரு பகுதியாக நேற்று (25.09.2024) குச்சிப்புடி (Kuchipudi) நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நடன நிகழ்ச்சியைக் கலைமாமணி மாதவபெட்டி மூர்த்தி அவர்களும், அவரது மாணவர்களும் நிகழ்த்தினர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று
(15.08.2024) நடைபெற்ற நாட்டின் 78ஆவது சுதந்திர தின நாள் விழாவில் இயக்குநர் பேராசிரியர்
இரா.சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினார்.
பதிவாளர் முனைவர்
ரெ. புவனேஸ்வரி, நிதி அலுவலர் திரு ஆ. குமரேசன் மற்றும் நிறுவனப் பணியாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
22.06.2024 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் புதுதில்லியில் உள்ள பாரத மொழிகளின் குழுவும் இணைந்து “கல்வி நிறுவனங்களில் திருக்குறளின் விழுமியங்களைப் பரப்புதல்” என்னும் பொருண்மையில் பயிலரங்கினை நடத்தின. இதில் பாரத மொழிகளின் குழுத் தலைவர் பத்மஸ்ரீ முனைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், நிறுவனப் பதிவாளர் முனைவர்
ரெ. புவனேஸ்வரி, தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு அடிப்படைத் தமிழ்க் கற்பித்தல் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்
இன்று (07.03.2024) மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வந்து பார்வையிட்டார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டுவரும் ஆய்வுப் பணிகள் குறித்து நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் அமைச்சர் அவர்களிடம் விளக்கிக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, நிதி அலுவலர் திரு. ஆ. குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் பிரெயில் புத்தகங்களை இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்களும் பதிவாளர் முனைவர்
ரெ. புவனேஸ்வரி அவர்களும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் திரு. அசோக்குமார் (இளங்கலைத் தமிழ், இரண்டாமாண்டு, முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலூர்) அவர்களுக்கு இன்று (12.02.2024) வழங்கித் தொடங்கிவைத்தனர்
செம்மொழி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக நடைபெற்ற விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பயிலரங்கின் ஒரு பகுதியாக மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரம் கோயில்களுக்குச் சென்று தமிழ்நாட்டின் கட்டிடக்கலைச் சிறப்பு, வரலாறு, பண்பாடு போன்றவற்றோடு ஒப்பீட்டாய்வு மேற்கொண்ட படங்களின் தொகுப்பு
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக நடைபெற்ற விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பயிலரங்கின் நிறைவு விழாப் படங்கள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பொருண்மையில் 21.01.2024 அன்று நடைபெற்ற பயிலரங்கில் பரத நாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வின் படத் தொகுப்பு
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்களின் பிரெயில் பதிப்புகளையும், 15 திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களையும் 17.12.2023 அன்று வாரணாசியில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்க விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்

தமிழக நாட்டுப்புற மரபுகள் – பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழக நாட்டுப்புறக் கலைகளின் காட்சித் தொகுப்பு
பாரத மொழிகளின் திருவிழாவினை முன்னிட்டுச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘தமிழக நாட்டுப்புற மரபுகள் – பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழக நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்
பாரத மொழிகளின் திருவிழாவினை முன்னிட்டுச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் (29.11.2023 – 12.12.2023) ‘ஒப்புநோக்கில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள்’ புத்தொளிப் பயிற்சி வகுப்பில் நடைபெற்ற சங்கப் பாடல்களுக்கு ஏற்ற நடன நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு
பாரத மொழிகளின் திருவிழாவினையொட்டிச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழில் கையொப்பமிடுவதை ஊக்குவிக்கும் வகையில் 31-10-2023 அன்று என் மொழி என் கையொப்பம் என்ற இயக்கம் தொடங்கிவைக்கப் பெற்றது. நிறுவன இயக்குநர் பேராசிரியர்
இரா. சந்திரசேகரன், நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, நிறுவனத் துணைத் தலைவர், தமிழறிஞர்கள், சித்த மருத்துவர்கள், நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தமிழில் கையொப்பமிட்டனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்
12-10-2023 வியாழக்கிழமையன்று தொல்காப்பியர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தலைமையுரை ஆற்றினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேசுவரி வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் இராம. குருநாதன் சிறப்புரை வழங்கினார். முனைவர் த. சரவணன் வரவேற்புரையும் திரு. தி.ஞா. அருள்ஒளி நன்றியுரையும் ஆற்றினர். நிறுவனப் பணியாளர்களும் அறிஞர்களும் விழாவில் பங்கேற்றனர்.
‘செம்மொழி நாள்
விழா’

இன்று (29.07.2023) புது தில்லியில் நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செவ்வியல் தமிழ் இலக்கியம் குறித்த 10 நூல்களை மாண்புமிகு
மத்தியக் கல்வித் துறை அமைச்சர்
திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
ஜனவரி 11, 2023 அன்று, பேரா. சைலேந்திர மோகன் (இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. சி.வி. சிவராமகிருஷ்ணா (தலைவர், செம்மொழிகள் பிரிவு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. எம். சம்பத்குமார் (இயக்குநர், செம்மொழித் தெலுங்கு மையம், ஆந்திரப்பிரதேசம்), பேரா. எம்.என். தல்வார் (இயக்குநர், செம்மொழிக் கன்னட மையம், கர்நாடகா), பேரா. பி.கே. பாண்டா (இயக்குநர், செம்மொழி ஒடியா மையம், ஒடிசா), பேரா. இராதாகிருஷ்ணன் (இயக்குநர், செம்மொழி மலையாள மையம், கேரளா) ஆகியோர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் பார்வையிட்டு, நிறுவனப் பணிகளைக் கேட்டறிந்தனர். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்.

பிரெய்லி நூல் பதிப்புத் திட்டம்
வேலை வாய்ப்புகள்

நிதி நல்கை
விருதுகள்
வெளியீடுகள்
மின் பதிப்புகள்
தொடர்புக்கு
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
செம்மொழிச் சாலை
பெரும்பாக்கம்
சென்னை - 600100.
E-Mail : office@cict.in
Phone : 044-22540125