தகவல் அறியும் உரிமைச் சட்டம்

கையேடு 1
இந்தக் கையேட்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் கடமைகளின் விவரங்கள், தற்போதைய நிறுவன அமைப்பு, அதன் குறிக்கோள்கள், நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்நிறுவனம், 2008ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்நிறுவனம் தமிழின் செவ்வியல் காலகட்ட (பண்டையக் காலத்திலிருந்து கி.பி. 600 வரை) தமிழின் பழமை மற்றும் அதன் தனித்துவம் தொடர்பான ஆய்வுகளில் மட்டுமே கவனம்செலுத்தி முடிபுகளைத் தருகிறது.

கையேடு 2
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள். தற்போது இது பொருந்தாது.

கையேடு 3
முடிவெடுக்கும் செயல்பாட்டில் பின்பற்றப்படும் நடைமுறை, மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறல் இவற்றின் வழிமூலங்கள். தற்போது இது பொருந்தாது.

கையேடு 4
நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கான விதிமுறைகள். தற்போது இது பொருந்தாது.

கையேடு 5
நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லது அதன் செயல்பாடுகளை நிறைவேற்ற நிறுவன ஊழியரால் பயன்படுத்தப்படும் விதிகள், ஒழுங்குமுறைகள், அறிவுறுத்தல்கள், கையேடுகள் மற்றும் பதிவுகள். தற்போது இது பொருந்தாது.

கையேடு 6
நிறுவனம் அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களின் நிரல். இந்நிரலில் நிறுவனம் வைத்திருக்கும் ஆவணங்களான சம்பளப் பேரேடு, வரவு – செலவு கணக்குப் பதிவேடு, நுகர்வு மற்றும் நுகர்வல்லாதவனவற்றின் இருப்புப் பதிவேடுகள், அனுப்புகைப் பதிவேடுகள், வருகைப் பதிவேடுகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.

கையேடு 7
நிறுவனத்தின் கொள்கை வகுத்தல் அல்லது அதைச் செயல்படுத்துவது தொடர்பாகப் பொது மக்களுடன் கலந்தாலோசிக்க அல்லது பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஏற்பாட்டின் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. நிறுவனத்தின் வலைத்தளமான www.cict.in,நிறுவனக் கொள்கை வகுத்தல் மற்றும் செயல்படுத்தல் தொடர்பாகப் பொது மக்களுடனான தகவல்தொடர்பு ஆலோசனைக்கான ஊடாடும் தொடர்பு வழிமூலத்தை வழங்குகிறது.

கையேடு 8
நிறுவனத்தின் பகுதியாகவோ அல்லது அதன் ஆலோசனை நோக்கத்திற்காகவோ அமைக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஆட்சிக்குழு, ஆலோசனைக் குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்கள் மற்றும் பிற அமைப்புகளின் அறிக்கையும் மேலும் அந்த ஆட்சிக்குழு, ஆலோசனைக் குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்கள் மற்றும் பிற அமைப்புக் கூட்டங்களின் நடவடிக்கைக் குறிப்புகள் பொதுமக்களின் பார்வைக்கு உள்ளதா எனவும், அல்லது அத்தகைய கூட்டங்களின் நிகழ்வுக் குறிப்புகள் பொதுமக்களால் அணுகக்கூடியவையாக உள்ளதா எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தக் கையேடு பின்வரும் குழுக்களின் அரசியலமைப்பு மற்றும் பதவிகளின் பெயர்களைப் பட்டியலிடுகிறது: உச்ச அமலாக்கக் குழு, திட்ட ஆலோசனைக் குழுக்கள், வல்லுநர் குழுக்கள் மற்றும் கொள்முதல் குழு. குடிமக்களின் சாசனங்கள்.

கையேடு 9
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் விவரத்திரட்டு. இத்திரட்டில் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பெயர்கள், பதவியின் பெயர்கள், பிறந்தநாள் விவரங்கள், குடியிருப்பு முகவரிகள் தொலைபேசி எண்களுடன் குறிக்கப்பட்டிருக்கும்.

கையேடு 10
தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள் பெறும் மாத ஊதியம், நிறுவன விதிமுறைகளில் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டு முறை உட்பட இடம்பெற்றிருக்கும். இந்தக் கையேட்டில் நிறுவன அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பெற்ற ஊதியமும் அடங்கும்.

கையேடு 11
திட்டங்களின் விவரங்கள், முன்மொழியப்பட்ட செலவுகள் மற்றும் வழங்கப்பட்ட செலவினங்கள் பற்றிய அறிக்கைகள் இதில் இடம்பெற்றிருக்கும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆண்டுவாரியான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு மற்றும் முன்மொழியப்பட்ட செலவுகள் இந்தக் கையேட்டில் சேர்க்கப்படும்.

கையேடு 12
மானியத் திட்டங்களைச் செயல்படுத்தும் முறை, ஒதுக்கப்பட்ட தொகைகள் மற்றும் அத்தகைய திட்டங்களின் பயனாளிகளின் விவரங்கள். இது பொருந்தாது.

கையேடு 13
நிறுவனம் வழங்கிய சலுகைகள், அனுமதிகள் அல்லது அதிகாரமளித்தலின் விவரங்கள். இது பொருந்தாது.

கையேடு 14
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்குக் கிடைக்கக்கூடிய அல்லது அது வைத்திருக்கும் தகவல்களைப் பற்றிய விவரங்கள் மின்னணு வடிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. நிறுவனத்தின் வலைத்தளம்www.cict.in தமிழாய்வு அறிஞர்களுக்கான பயிற்சித் திட்டங்கள், நீண்ட காலத் திட்டங்கள் மற்றும் நிறுவனத்தின் பிற நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கியது.

கையேடு 15
பொதுப் பயன்பாட்டிற்காக உள்ள நூலகம், அதன் வாசிப்புப் பகுதியின் வேலை நேரம் உள்ளிட்ட தகவல்களைப் பெறுவதற்குக் குடிமக்களுக்கு கிடைக்கும் வசதிகளின் விவரங்கள். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நூலகம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் திறந்திருக்கும். இது நிறுவனத்தின் பணியாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்களுக்குமானது. நிறுவனம் பற்றிய அனைத்து செய்திகளையும் நூலகம் வழங்குகிறது. புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் குறுந்தகடுகள் போன்ற வளங்களும் இதில் உள்ளன. இது குறிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்.

கையேடு 16
பொது தகவல் அலுவலரின் பெயர், பதவி மற்றும் பிற விவரங்கள்: பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை – 600 100, தொலைபேசி எண்: 044 – 22540124, மின்னஞ்சல்: registrar@cict.in , நிறுவனப் பதிவுக்குறிப்பில் திட்டமிடப்பட்டுள்ளவாறு நிறுவனத்தின் அதிகாரிகள், அதாவது ஆட்சிக்குழு, கல்விக்குழு, நிதிக்குழு நிறுவனப் பதிவுக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னிரண்டு புலங்கள் ஆகியன நிறுவப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் அனைத்துப் பணியாளர்களும் தற்காலிக அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் அனைத்துப் பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், நிரந்தரப் பணியிட நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.