கருத்தரங்குகள் & பயிலரங்குகள்

செம்மொழித் தமிழாய்வுகளை வளப்படுத்தும் நோக்கில் தேசிய, பன்னாட்டு அளவிலான கருத்தரங்குகள், பயிலரங்குகள், பணியரங்குகளை நடத்துதல்; ஆர்வமுள்ள பல்கலைக்கழகங்களுக்கும், பிற கல்வி நிறுவனங்களுக்கும் அவற்றை நடத்துவதற்குத் தேவையான நிதியுதவி அளிக்கும் திட்டத்தைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் 620 கருத்தரங்கு, பயிலரங்கு நிகழ்ச்சிகளுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதி வழங்கியுள்ளது. கருத்தரங்கம் ஒவ்வொன்றிற்கும்1,50,000 ரூபாயும் பயிலரங்கம் ஒவ்வொன்றிற்கும் 2,50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகின்றது.

ஆண்டு கருத்தரங்குகள் பயிலரங்குகள்
2006-07 10 3
2007-08 16 20
2008-09 22 12
2009-10 21 29
2010-11 30 31
2011-12 40 23
2012-13 50 31
2013-14 71 67
2014-15 81 49
2015-16 7 7
மொத்தம் 348 272