முதன்மைத் திட்டங்கள்

செம்மொழித் தமிழின் பழம்பெருமைகளை மீட்டெடுத்து அவற்றை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் பெரும்பணியைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செய்து வருகிறது. பல்துறை சார்ந்த அறிஞர்களின் ஒருமித்த கருத்திற்கிணங்கச் செம்மொழித் தமிழின் திட்டப்பணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. தொன்மைக் காலம் தொடங்கிக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையுள்ள செம்மொழித் தமிழை மையப்படுத்தி முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் நன்கு புலப்படுத்தும் நோக்கில், உடனடியாகச் செயற்படுத்த வேண்டிய பத்து முதன்மைத் திட்டப் பணிகள் வகுக்கப்பெற்றுள்ளன.

தொடர்புக்கு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழிச் சாலை
பெரும்பாக்கம்
சென்னை - 600100.