குறுந்திட்டப்பணிகள்
கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு உட்பட்ட செவ்வியல் நூல்கள் மற்றும் பிற தரவுகள் களனாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஈடுபட்டுள்ள பத்துப் பெருந்திட்டங்களுக்குத் துணைநிற்கும் வண்ணமும், செம்மொழித் தமிழாய்வின் வளர்ச்சிக்கு உதவியளிக்குமாறும், நிறுவனச் செயல்வட்டத்திற்கு வெளியே அமையும் மூத்த ஆய்வறிஞர்களையும் ஆய்வு நிறுவனங்களையும் அந்நிறுவன ஆய்வு அலுவலரையும் பயன்கொண்டு செம்மொழித் தமிழாய்வுக்கு வளர்ச்சி நல்குவதற்காகக் குறுகிய கால ஆய்வுத் திட்டங்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பெற்றுள்ளது. பெரும்பாலும் ஓராண்டுக்கால அளவும் ரூ. 2.5 இலட்சம் நல்கையுமாக இது அமையும். இரண்டு அல்லது மூன்றாண்டுகட்குரிய பெருந்திட்டங்கள் கூடுதல் நல்கையுடன் அமைய வாய்ப்புண்டு.
வ.எண் | பொருண்மை | தொகை ரூ. |
---|---|---|
1 | மதிப்பூதியம்- முதன்மை ஆய்வாளர் | – |
2 | திட்டப்பணி உதவியாளர் (1x8000x12) | 96,000 |
3 | கலந்தாய்வு / நேர்முகம் | 20,000 |
4 | நூல்களும் ஆய்விதழ்களும் | 20,000 |
5 | எழுதுபொருள் /ஒளிநகல் / ஒளியச்சு | 20,000 |
6 | பயணம் / களப்பணி | 10,000 |
7 | பிற செலவினங்கள் | 12,000 |
மொத்தம் | 2,50,000 |
ஆண்டுவாரியான குறுகிய கால ஆய்வுத் திட்டப் பணிகள்
வ.எண் | ஆண்டு | எண்ணிக்கை | நிதி நல்கை ரூ. |
---|---|---|---|
1 | 2006-2007(Mar. 2007) | 07 | 12,20,000/- |
2 | 2007-2008 (Dec. 2007) | 28 | 97,50,000/- |
3 | 2008-2009 (Mar. 2009) | 25 | 96,71,500/- |
4 | 2009-2010 (Aug. & Dec. 2009) | 31 | 1,77,30,000/- |
5 | 2010-2011 (Aug. & Nov.) | 44 | 2,01,78,000/- |
6 | 2011-2012 | 24 | – |
7 | 2012-2013 | 42 | – |
8 | 2013-2014 | 44 | 1,09,28,000/- |
9 | 2014-2015 | 16 | 39,96,500/- |
10 | 2015-2016 | 20 | 50,00,000/- |